சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

எழுதப்பட்ட மையின் வயதை கண்டறிய முடியாது - சென்னை உயர்நீதி மன்றம், மதுரை கிளை.

பெரும்பாலும் காசோலை வழக்குகளில் அவற்றை பூர்த்தி செய்ய உபயோகித்த மையின் வயதை கொண்டு வழக்கை நிரூபிக்க வழக்கறிஞர்கள் முயற்சி செய்வர்.

அவ்வாறு மையின் வயதை கண்டுபிடிக்கும் வசதி ஹைதரபாத் அரசு பரிசோதனைக் கூடத்தில் உள்ளது என்ற அடிப்படையில் இதுவரை தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அத்தகைய ஒரு தீர்ப்பை இந்த வலை தளத்திலும் வெளியிட்டு இருந்தேன் (http://vskdiary.blogspot.in/2011/04/blog-post.html).

ஆனால் தற்போது அவ்வாறு வயதை கண்டறியும் வசதி நம் நாட்டில் எங்குமே இல்லை என்று முந்தைய தீர்ப்புகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 18.7.2012 அன்று காசோலை வழக்கில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.

அந்த தீர்ப்பின் முழு  வடிவமும் காண கீழே உள்ள எனது மற்ற வலை தளங்களை பார்க்கவும்.

http://vskesavan.blogspot.in/2012/08/age-of-ink-in-document-can-not-be.html

http://thevsklawfirmfamilylaw.blogspot.in/2012/08/age-of-ink-in-document-can-not-be.html

http://thevsklawfirmdeeds.blogspot.in/2012/08/age-of-ink-in-document-can-not-be.html

http://thevsklawfirm.blogspot.in/2012/08/age-of-ink-in-document-can-not-be.html

இந்த சென்னை உயர்நீதிமன்ற வலைத்தளத்திலும் அந்த தீர்ப்பை பெறலாம்:

http://judis.nic.in/judis_chennai/qrydisp.aspx?filename=60539